+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 717
1 -12 -2010
*
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 717
1 -12 -2010
*
நீ நடக்க பாதை ஆனேன்
என்னில் பாதி ஆனாய்
நீ கடக்க பாலம் ஆனேன்
என்னால் பலம் ஆனாய்
நீ உயர ஏணி ஆனேன்
உயர்ந்தபின்
ஏன் நீ என்கிறாய்.
-நாகராஜ் மதுரை
9965015776 *************
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 718
2-12 -2010
*
வெகு நேரத்துக்கு முன்
வந்துபோன
உன் வருகையை
நினைவு படுத்துகிறது
கூரை வழி சொட்டும்
மழை நீர்.
-க.லக்ஷ்மணன்
புதுப்பட்டிணம்
9894506387
****************
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 719
3-12 -2010
*
அம்மாவைப்போலவே
நியாயம் கற்பித்து
சிரிக்கிறாள்
மனைவியும்,
உணவில் விழுந்த
ஒற்றை முடிக்காக...
நீண்டுகொண்டே இருக்கின்றன
என் செல்ல கோபங்களும்
மூட நம்பிக்கையுடனான
எனது உறவுகளும்..
-ஜஸ்டின் பிரபு
கொடைக்கானல்
9865348600
**********************
**********************
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 720
4-12 -2010
*
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 720
4-12 -2010
*
மல்லிகப்பூ காத்தடிக்கும்
அதில் மாமன் வாசம்
சேர்ந்தடிக்கும்ஒத்தட பார்வை
அவரு பாக்க
உள்மனசு கூத்தடிக்கும்,
நட்ட நடு சாமத்துல
சூரியன் தான் கண்ணடிக்கும்,
அவன் தொட்டிழுக்கும் வேலையில
சோலையில தேன் கலக்கும்,
பத்து மாசம் போனபின்னே
முத்து பிள்ளை தான் போறக்குமுனு
கண்ட நெனப்பெல்லாம்
கனவாகி போச்சுதடா
கருப்பை நோவு வந்து
என் கழுத்தறுத்து
போகுதடா.
-வே.விநாயமூர்த்தி
அந்தியூர்
9715216794
*****************
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
+ வி ஐ பி மேடை +
நாள் : 721
5-12 -2010
*
இழந்த உயிர்களோ கணக்கில்லை
இருமிச்சாவதில்லை
சிறப்பில்லை
இன்னும் ஏனடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று
வீரத்தை
குண்டுகள் துளைக்காது
வீரனை சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது.
-கவிஞர் அறிவுமதி
******************************
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 722
6-12 -2010
*
நீ சூடிய
பூக்களுக்கு மட்டும்
வாடிய பின்னும்
வசந்த காலம்
என்
புத்தக பக்கங்களில்.
-அன்புராஜ்
8883453001
*******************
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 723
7-12 -2010
*
அடுக்கடுக்காய் தொடரும்
சாத்தானின் வெற்றிகள்
மௌவுனமாய் இருக்கும்
கடவுள்
குவிந்து கிடக்கும்
மனித சடலங்கள்
வேடிக்கை பார்க்கும்
விண்ணும் மண்ணும்...
-எ.எம்.முபாரக்
-9952561499
************************
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 724
8-12 -2010
*
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 724
8-12 -2010
*
சூட்ச்சுமம் இல்லா
மனதின் உச்சரிப்பில்
நீ என்னை அழைக்கிறாய்
அனிச்சையாக
திரும்பி பார்க்கும் கண்களில்
முத்தமிடுகிறாய்
முறுவல் கொண்டு,
எனக்கான நிறுத்தம் வந்தபின்னும்
இறங்காமல் காத்திருக்கிறேன்
உன்
பிரியாவிடை பார்வைக்காக.
-அருணாசலசிவா
சென்னை
8124177898
***********************
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 725
9-12 -2010
*
மனதின் உச்சரிப்பில்
நீ என்னை அழைக்கிறாய்
அனிச்சையாக
திரும்பி பார்க்கும் கண்களில்
முத்தமிடுகிறாய்
முறுவல் கொண்டு,
எனக்கான நிறுத்தம் வந்தபின்னும்
இறங்காமல் காத்திருக்கிறேன்
உன்
பிரியாவிடை பார்வைக்காக.
-அருணாசலசிவா
சென்னை
8124177898
***********************
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 725
9-12 -2010
*
மரமாய் இருந்தபோது
வெட்டுப்பட்ட வலியை
மறந்திருக்க கூடும் அந்த தாள்,
உன் ஓவியத்தை
தூரிகையால் தீட்டுகையில்.
-தனபால்
ராசிபுரம்
9842037760
************************
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 727
11-12 -2010
*
தீர்த்தத்தில் குளித்துவந்த
திராவக துளி திருநீறில் சலித்தெடுத்த
கந்தக பொடி
வறுமையும் புலமையும்
கலந்து
தமிழ்த்தாய் சமைத்த
சுண்டவைத்த சூரியன்
பாரதி.
-கோனூர் வைரமணி
மேட்டூர்
9944719472
*************************
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 737
20-12 -2010
*
நேர்த்திக்கடன் தீர
உண்டியலில்
காணிக்கை
போடுகிறாள் அம்மா,
கை நிறைய வறுமையோடு.
-திருமயம் பாண்டியன்
9942847919
***************************
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 738
21-12 -2010
*
பெயர் மாறிய
மகிழ்ச்சியில் மட்டும்
மாற்றுத்திரனாளிகள்.
-கோபி பச்சமுத்து
9047160971
***********************
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 739
22-12 -2010
*
மார்பகங்களில்
மனித கரங்களின் வக்ரம்
பட்டுப்பட்டு
கருத்து கிடக்கிறது
கோவில் சுவற்றில்
பெண் சிலைகள்.
-தஞ்சை கமருதீன்
9940781914
**********************
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 740
23-12 -2010
*
சந்நியாசி மட்டுமல்ல
சம்சாரியும்
ஆடை குறைக்கிறான்
கோடை வெய்யிலில்.
-கி.நடராஜன்
திருச்சி
9942447194
***************************
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
+ வி ஐ பி மேடை +
நாள் : 743
26-12 -2010
*
மாபெரும் அறைகூவலுக்குப்பின்
உலக தொழிலாளிகள்
ஒன்று சேர்ந்தார்கள்,
லெனின் சொன்னான் :
என்னை மன்னித்து விடுங்கள்
உங்களுக்கு முன்பே
முதலாளிகள்
ஒன்று சேர்ந்துவிட்டார்கள்.
-கவிஞர். நா.முத்துக்குமார்
*********************************
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 744
27-12 -2010
*
என் உறவை
முறித்துக்கொள்வதாய்
நீ
எழுதும் நிலைவந்தால்
மறக்காமல்
உனது பேனா முள்ளையும்
சேர்த்தே முறித்துவிடு
மரண தண்டனை
அளித்தபின்
கடைபிடிக்கும் மரபு அது.
-தனபால் ராசிபுரம்
9842037760
***************************
ராகா பதிவுகள் தொடரும்....
No comments:
Post a Comment